Apr 27, 2021
recorded single day COVID-19 Cases 997 in SL
இதன்படி இன்று இதுவரை 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தொற்றுடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,152 ஆக உயர்ந்துள்ளது.
மரணமடைந்தோர் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது.
Sri Lanka today recorded the highest number of coronavirus cases reported in a single day. 997 COVID-19 cases were identified thus far.
Infected active Cases increased to 7,512, deaths increased to 647.
Apr 26, 2021
six house burned by a fire accident
நுவரெலியா - இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று (25) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் எரிந்து நாசமாகின.
இதனால் 6 குடும்பங்களை சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாத போதிலும், பெருமளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.
Six houses were partially burned by a fire accident in a series of 16 houses at Ragala central section - Nuwara Eliya. As a result, 30 people of 6 families affected.
Multiple areas isolated
Miriswatte Grama Niladhari Division and Pelanwatte North and East - Kalutara District, Poompuhar - Trincomalee, Polhena, Heeralugedara, Kaluaggala & Aswennawatta East- in Gampaha District will be isolated from 08 PM today.
திருகோணமலை - பூம்புகார், களுத்துறை மிரிஸ்வத்த, பெல்வத்த வடக்கு, கிழக்கு, கம்பஹா - பொல்ஹென, ஹீரலுகெதர, களுக்கல, அஸ்வென்னவத்த கிழக்கு பகுதிகள் இன்று இரவு முதல் முடக்கம்.
schools will not close
தற்போதை நிலையில் பாடசாலைகள் மூடப்படாது என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
எனினும் சில பிரதேச நிலைமைகளை பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சு தெரிவித்தது.
Education Ministry says schools will not close owing to the present corona situation. Schools will be closed based on the situation in certain areas. Principals granted power to reach decisions.
15 persons injured including 12 Army Personnels in Jaffna
உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 12 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.
சம்பவத்தில் இராணுவ வீரர்கள் 12 பேரும் சிவிலியன்கள் 3 பேரும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பரில் இருந்த இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டுவருகின்றனர்.
15 persons including 12 army personnels injured while a army canter and sand tipper collided in Urumpirai junction - Jaffna, this morning.
Dec 17, 2020
வடக்கில் அனைத்து சந்தைகளும் மூடப்படுகிறது!
வடக்கு மாகாணத்தின் அனைத்து பொதுச் சந்தைகளும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மருதனார்மடம் கொத்தணி காரணமாக அனைத்துச் சந்தைகளின் வியாபாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த கொரோனா அபாயக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் வியாபார சேவை, மற்றும் சமூக இடைவெளிகளுடன் பொது வெளியில் முன்னெடுக்கப்பட்ட வியாபார முறைகள் வெற்றி அளித்துள்ளதால் அந்த நடைமுறைகளைத் தொடருமாறு வியாபாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.






