மீசாலை விபத்தில் ஒருவர் பலி! - Seithi

தேடு

Sep 6, 2019

மீசாலை விபத்தில் ஒருவர் பலி!

யாழ்பபாணம் - தென்மராட்சி, மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (06) மாலை  4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த அதி சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காயமடைந்தவரை நோயாளர் காவு வண்டியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.

இதன்போது பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment