வேலைவாய்ப்பு நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - Seithi

தேடு

Sep 5, 2019

வேலைவாய்ப்பு நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தும் நிறுவனமாகச் செயற்படும் பிரண்டினா வேலைவாய்ப்பு நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 28.08.2019 அன்று வவுனியா நகரக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, சென்ற ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் கணிதம் உட்பட 5 பாடங்களில் விசேட சித்திகளைப் பெற்ற மாணவர்களில் வறுமைக் கோட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 110 மாணவர்களுக்கு சான்றிதழும், மேலதிக வகுப்பிற்கான உதவித் தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரண்டினா வேலைவாய்ப்பு நிலையத்தின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் டெவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா, தெற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் நடராஜா, சிறப்பு அதிதியாக வரோட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி ரொனால்ட் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, உதவி வலயக் கல்விப் பணிப்பாளர் நடராஜா "வறுமை கற்றலுக்கு தடையாகாது" எனவும், அருட்பணி ரொனால்ட் அடிகளார் "மாணவர்கள் தமது எதிர்காலத்தை தாமாகவே வடிவமைத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களது கரங்களிலேயே தங்கியுள்ளது" என்றும் தெரிவித்தனர்.











நிருபர் ச.நௌபர்

No comments:

Post a Comment